தனியுரிமைக் கொள்கை

உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம். எங்கள் மீதான உங்கள் நம்பிக்கையை பராமரிப்பதற்கு நாங்கள் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கின்றோம். நாங்கள் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதிசெய்கிறோம் மற்றும் உயர்ந்த தரநிலைகள் கொண்ட வாடிக்கையாளர் தனியுரிமைக் கொள்கையை பின்பற்றுகிறோம்.

Wநாங்கள் இவ்விடம் கீழே எங்கள் தகவல் சேகரிப்பு மற்றும் பரப்பு நடைமுறைகளை குறிப்பிடுகிறோம்.

எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் வரைமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறீர்கள். இதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால், தயவுசெய்து எங்கள் வலைத்தளத்தை அணுகவோ பயன்படுத்தவோ வேண்டாம். இந்தக் கொள்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி மாற்றத்துக்கு உட்பட்டது. எனவே, சிறிது காலத்துக்கு ஒருமுறை சேர்க்கப்படும் மாற்றங்கள் மூலம் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் எங்கள் தனியுரிமைக் கொள்கையை படித்துப் பார்க்குமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்..இந்தத் தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்துகின்ற "நாங்கள்" அல்லது "எங்கள்" மற்றும் "நிறுவனம்" போன்ற சொற்கள் மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட் நிறுவனத்தையும் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால சார்பு ஸ்தாபனங்களையும் குறிக்கின்றன.

தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு:

நாங்கள் உங்களைப் பற்றி தனிப்பட்டவர்-சார்ந்த மற்றும் தனிப்பட்டவர்-சாராத தகவலைச் சேகரிக்கிறோம், அது எங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் போது, கட்டாயமானது மற்றும் கட்டாயம் அல்லாதது என வகைப்படுத்தப்படுகிறது.

தனிப்பட்டவர்-சார்ந்த தகவலில் ஏனையவற்றுக்கிடையே இவையும் உட்படும்: உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், உங்கள் தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற தொடர்புத் தகவல்கள் ஆகியன. நீங்கள் எங்களது சேவைகள் சிலவற்றைப் பயன்படுத்தும் போது ஒரு பயனர் ID-யை உருவாக்குவதற்கோ அல்லது எங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்வதற்கோ அல்லது எங்களிடம் ஆர்டர் கொடுப்பதற்காக நிதிசார்ந்த தகவலை வழங்குவதற்கோ, அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவையை அழைப்பு, மின்னஞ்சல் அல்லது மற்ற வழிகளில் தொடர்புகொள்வதற்கோ உங்கள் தனிப்பட்ட தகவலை அவசியமாக வழங்குமாறு கோரப்படும். உங்கள் தகவலை வழங்காமலும் நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கலாம், எனினும் அந்நிலையில் உங்களால் அந்த வலைத்தளத்திலுள்ள சில பகுதிகளை அணுகமுடியாது, எனவே எங்கள் சேவைகள் சிலவற்றை தவறவிடுவீர்கள்.

மேலும், ஏனையவற்றுக்கிடையே உங்கள் பரிந்துரைச் சீட்டு, பரிசோதனை அறிக்கைகள், கடந்தகால மருத்துவச் சரித்திரம் போன்றவையும் உள்ளிட்ட உங்கள் மருத்துவப் பதிவேடுகள் போன்ற சில தனிப்பட்ட, முக்கியமான தகவலையும் அவசியமாக வழங்குமாறு உங்களிடம் கோரப்படும். இந்தத் தகவல்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நாங்கள் புரிந்துள்ளோம், எனவே இந்தத் தகவல்களானது நமக்கிடையே வழங்கப்படுவதாக பரஸ்பரம் சம்மதிக்கப்பட்ட தேவையான சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம். மேலும், உங்கள் மருத்துவப் பதிவேடுகளை எங்கள் தளத்தில் பதிவேற்றுவதற்கும் சேமித்துவைப்பதற்கும் உங்களுக்குச் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது, அவற்றை நீங்கள் மட்டுமே, உங்களுக்குப் பிரத்யேகமான பயனர் ID-யை பயன்படுத்தி அணுகமுடியும். இதன் மூலம் உங்களால் உங்கள் மருத்துவப் பதிவேடுகள் அனைத்தையும் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் வெறும் கிளிக் மூலம் அணுகமுடியும். மேலும், இந்தப் பதிவேடுகளுக்கு உங்களைத் தவிர வேறு யாருக்கும் அணுகல் இருக்காது என்பதை மீண்டும் இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்; மேலும் அது, தகவல் அனுப்பப்படும் வழியில் களவுக்கும் மறைவிலக்கத்துக்கும் ஆளாவதைத் தவிர்க்கும் முகமாக எங்களுக்கு மறையேற்றிய வடிவில் அனுப்பப்படும்.

அதுமட்டுமல்ல, நீங்கள் எங்களுடன் பரிவர்த்தனை மேற்கொண்டால், உங்கள் பில்லிங் முகவரி, கிரெடிட் / டெபிட் கார்டு எண், கிரெடிட் / டெபிட் கார்டு காலாவதித் தேதி மற்றும்/ அல்லது பிற கட்டணச் சாதன விவரங்கள் போன்ற சில கூடுதல் தகவல்களை சேகரிப்போம்.

உங்களுக்கு சிக்கல்-இல்லாத, சௌகரியமான, தங்குதடையற்ற மற்றும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, பாதுகாப்பான அனுபவத்தை வழங்க எங்களுக்கு முற்றிலும் அவசியமான மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்களையே நாங்கள் சேகரிக்கிறோம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இது, உங்களுக்கேற்பத் தகவமைத்த சேவைகளை வழங்குவதற்கும், உங்கள் அனைத்து கேள்விகள் குறித்தும் உதவுவதற்கும், நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கும், ஒரு நீண்ட, நீடித்த உறவை உறுதிசெய்வதற்காக உங்களை தொடர்ந்து கவனிப்பதற்கும், மற்றும் எல்லாவற்றையும்விட முக்கியமாக, எவ்வித மோசடியான மற்றும் சட்டவிரோத பிரயோகத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கும் எங்களுக்கு உதவும்.

நாங்கள் எங்கள் வலைப் பக்கத்தின் ஓட்டத்தை பகுப்பாய்வு செய்ய உதவுவதற்கும், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் சில பக்கங்களில் "குக்கீஸ்" போன்ற சில தரவுச் சேகரிப்புச் சாதனங்களை பயன்படுத்துகிறோம். "குக்கீஸ்" என்பவை, எங்கள் சேவைகளை வழங்குவதற்குத் துணைபுரிவதற்காக உங்கள் ஹார்ட் டிரைவில் அமர்த்தப்படும் சிறு கோப்புகள். நாங்கள் வழங்கும் சில அம்சங்கள், "குக்கீஸ்" பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறும்.

மேலும், ஒரு செஷனின் போது நீங்கள் குறைவான தடவையே உங்கள் கடவுச்சொல்லை குறிப்பிடுவதற்கும் வழிசெய்வதற்கும் நாங்கள் குக்கீஸ் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான குக்கீஸ் "செஷன் குக்கீஸ்" ஆகும், அப்படியென்றால் அந்த செஷன் முடிந்ததும் அவை உங்கள் ஹார்ட் டிரைவிலிருந்து தானாகவே நீக்கப்படும். உங்கள் பிரவுஸர் அனுமதித்தால் நீங்கள் தாராளமாக குக்கீஸை நிராகரிக்கலாம், எனினும் எங்கள் அனைத்து சேவைகளுக்கும் அணுகல் பெறுவதை உறுதிசெய்வதற்காக நீங்கள் அவற்றை அனுமதிக்குமாறு நாங்கள் அழுத்தமாகப் பரிந்துரைக்கிறோம்.

தகவல் பகிர்வு:

உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் பின்வரும் சூழ்நிலைகளில் தவிர மற்றபடி உங்கள் தகவலை வெளிப்படுத்த மாட்டோம் என்று இதன்மூலம் அறிவிக்கிறோம்:

  • சட்ட நிறைவேற்ற அமைப்புகளுக்கு - பொது மக்களின் நலன் கொண்டுள்ள ஒரு புலனாய்வு தொடர்பாக, அதுவும் உரிய சட்ட நடைமுறையின் அங்கீகாரத்தை பெற்ற பிறகே அளிக்கப்படும்
  • எங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சார்பு ஸ்தாபனங்களுக்கு - மோசடியை கண்டறியவும் தடுக்கவும், களவு மற்றும் இதர சட்டவிரோத செயல்பாடுகளை கண்டறியவும், எங்கள் சேவைகளை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து தடுக்கும் முகமாக தொடர்புள்ள அல்லது பன்மை கணக்குகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தவும்; இணை அல்லது கூட்டு-பிரான்ட் சேவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெருநிறுவன நிறுவனத்தால் வழங்கப்படும் பட்சத்தில் அத்தகு சேவைகளுக்கு வகைசெய்யவும் உதவும் வகையில் அளிக்கப்படும்
  • மேலும், நிறுவனம் எவ்விதத்திலும் தன்னை மறுகட்டமைப்பு செய்துகொள்ள முடிவெடுத்தாலும் அல்லது வேறொரு அமைப்பால் கையகப்படுத்தப்பட்டாலும் நாங்கள் இத்தகு தகவலை எங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சார்பு ஸ்தாபனங்களுடன் பகிர்ந்துகொள்வோம், மேலும் அத்தகு சூழலில் அந்த மற்ற தரப்பினர் இந்தக் கொள்கையை தொடர்ந்து கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதிசெய்வோம்.
  • எங்களிடம் இணையவழி கொள்முதல் செய்யும்போது அல்லது சுகாதார செக்-அப்களுக்காக முன்பதிவு செய்யும்போது, நீங்கள் உங்களது நிதிசார்ந்த தகவலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். நாங்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் இயக்கும் ஆன்லைன் பேமன்ட் கேட்வேயை பயன்படுத்துகிறோம், எனவே நீங்கள் வழங்கும் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற மிகவும் முக்கியமான தகவல்களானது அங்கீகரிக்கப்பட்ட பேமன்ட் கேட்வேக்களின் பத்திரமான தளங்கள் வழியாகவே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன, அவை டிஜிட்டல் ரீதியாக பரிவர்த்தனை செய்யப்பட்டவை, ஆகவே தற்போதைய தொழில்நுட்பத்தின்படி அதிகபட்ச சாத்தியமான பாதுகாப்பு நிலையை வழங்குகின்றன.

விளம்பரங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகள்:

எங்கள் வலைத்தளத்தில் சில விளம்பரங்களும், மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகளும் இடம்பெற்றிருக்கலாம். நீங்கள் இந்த விளம்பரதாரர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கு, ஒருவேளை விரும்பினால், அளிக்கும் தகவலின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை நாங்கள் கட்டுப்படுத்துவதோ அல்லது அதற்கு உத்தரவாதம் அளிப்பதோ இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆகவே, இந்த வலைத்தளங்களில் உங்களைப் பற்றி ஏதேனும் தகவலை வழங்கும் முன் அவர்களின் தனியுரிமைக் கொள்கையை படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்:

எங்களிடம் உள்ள உங்கள் தகவலின் இழப்பு, தவறான பிரயோகம் அல்லது மாற்றுதலிலிருந்து பாதுகாப்பை உறுதிசெய்ய, நாங்கள் கராரான, பலமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். உங்கள் தகவலை பாதுகாப்பதற்கும், அதை ஏதேனும் அதிகாரப்பூர்வமற்ற பயன்பாட்டிலிருந்து காப்பதற்கும் நாங்கள் அனைத்து அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். உங்கள் தகவலை ஏதேனும் களவு அல்லது சட்டவிரோதப் பயன்பாடு அல்லது அதுசார்ந்த மாற்றுதலிலிருந்து பாதுகாக்கும் வண்ணம், வெரிசைன் வழங்கிய SSL சான்றிதழும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இணையத் தொழில்நுடபம் 100% பாதுகாப்பு அளிக்கும் எனக் கூறமுடியாது என்பதால், அதைப் பயன்படுத்தும் போது உங்கள் அறிவார்ந்த முடிவை பிரயோகிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தப் பாலிசியிலோ அல்லது வேறு பிற இடத்திலோ அடங்கியுள்ளவை எதுவாகயிருந்தாலும் சரி, உங்கள் தனிப்பட்ட தகவலின் இழப்பு, சேதம் அல்லது தவறான பிரயோகம் ஒரு ஃபோர்ஸ் மேஜ்யூர் நிகழ்வு (கீழே வரையறுக்கப்பட்ட பிரகாரம்) சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில், அத்தகு இழப்பு, சேதம் அல்லது தவறான பிரயோகத்துக்கு எங்களைப் பொறுப்பாக்க முடியாது.

ஒரு "ஃபோர்ஸ் மேஜ்யூர் நிகழ்வு" என்பது, மெடி அசிஸ்ட்டின் நியாயமான கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஓர் நிகழ்வு, அதில் ஏனையவறுக்கிடையே நாசவேலை, தீ விபத்து, வெள்ளம், குண்டுவெடிப்பு, தெய்வ நிந்தனை, சமூகப் பூசல், மறியல் அல்லது ஏதேனும் வகையிலான தொழிற்சங்க நடவடிக்கை, கலவரம், கலகம், போர், அரசு நடவடிக்கைகள், கணினித் தரவு மற்றும் சேமிப்புச் சாதனத்துக்கு அதிகாரப்பூர்வமற்ற அணுகல், கணினிச் செயலிழப்பு, பாதுகாப்பு மற்றும் மறையேற்ற அத்துமீறல் முதலியவை உட்படும்.

ஒப்புதல்:

எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்துவதன் மற்றும் உங்கள் தகவலை வழங்குவதன் மூலம், நீங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் வரைமுறைகள் பிரகாரம் உங்கள் தகவலின் சேகரிப்புக்கும் பயன்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கிறீர்கள். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் ஏற்படுத்தும் ஏதேனும் மாற்றங்கள் குறித்து நீங்கள் அறிந்த நிலையில் இருப்பதற்காக தயவுகூர்ந்து அடிக்கடி இந்தப் பகுதியை பார்த்துக்கொள்ளவும்.

குறைதீர்ப்பு அதிகாரி:

2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளின் பிரகாரம், உங்கள் அனைத்துக் கேள்விகள் மற்றும் குறைகளுக்கும் தீர்வளிக்க இவ்விடம் கீழே குறைதீர்ப்பு அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறைதீர்ப்பு அதிகாரி:

மின்னஞ்சல் முகவரி: grievance.officer@mediassistindia.com
தொடர்பு எண்: +91 80 4969 8000

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட், டவர் D, 4ஆம் தளம்,
IBC நாலேஜ் பார்க், 4/1 பன்னார்கட்டா ரோடு,
பெங்களூர் – 560029

கட்டியாளும் விதிகள் மற்றும் சட்டம்:

நீங்கள் இந்த வலைத்தளத்தை பார்க்க விரும்பினால், உங்கள் பார்வையும் மற்றும் தனியுரிமை குறித்த ஏதேனும் பிணக்கும், இந்தப் பாலிசி மற்றும் வலைத்தளத்தின் பயன்பாட்டு வரைமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். மேற்கூறப்பட்டவற்றுக்கு அப்பால், இந்தப் பாலிசியின் கீழ் எழும் பிணக்குகள் எதுவும் இந்தியச் சட்டங்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும்.